Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

குவாலிபையர் - 1 விட்டுக்கொடுக்காத மும்பை போட்டிபோடும் புனே - இன்று பல பரீட்சை ரசிகர்களுக்கு விருந்து

 


Published by : Kiruthiga                                                    Updated : Tuesday, May 16,2017     11:00 AM


மும்பை :  ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் கவனித்து வரும் 10வது ஐ.பி.எல் சீசன் தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று முக்கியமான முதலாவது குவாலியர் ஆட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.

இதில் புள்ளி பட்டியலில் முதலாவதாக உள்ள மும்பை அணியும் இரண்டாவதாக உள்ள புனே அணியும் மோதுகின்றனர்.ரசிகர்களின் மிகுந்த ஆதரவை பெற்ற மும்பை அணியும், புனே அணியும் இன்று நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

பிளே ஃப் குவாலிபையர்-1 ரவுண்ட் மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே அணிகளின் மோதலுடன் தொடங்க விருக்கிறது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதில் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக பைனலுக்கு போகும் அதே சமயம், தோற்கும் அணிக்கு ஒரு கூடுதல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் எந்த அணி தோற்றாலும் அந்த அணி பெங்களூரில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியோடு குவாலிபையர்-2 போட்டியில் மோத வேண்டும்.

 

 

எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணி மோத உள்ளது அவர்களில் வெற்றி பெறும் அணியோடு இன்று தோற்க்கும் அணி வரும் 19-ந் தேதி வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் குவாலிபையர்-2 போட்டியில் மோதும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் குவாலிபையர்-1 மற்றும் குவாலிபையர்-2 ல் வெற்றி பெரும்  இரு அணிகள் வருகிற 21-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பைனல் போட்டியில் மோத உள்ளனர். இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு இறுதி போட்டிக்கு தயாராக ஞாயிற்றுக்கிழமை வரை போதிய நேரம் கிடைப்பதால் இன்றே வெல்ல மும்பையும், புனேவும் முயலும் அதுமட்டுமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இதை பார்க்க அதிகமாகியுள்ளது.