Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

சிரியாவின் தற்போதைய நிலைக்கு காரணம் பஷார் அல் ஆசாத்- அமெரிக்கா குற்றச்சாட்டு

 


Published by : Gayathri                                                                 Updated : Tuesday, May 16,2017     11:30 AM


சிரியாவில் பஷார் அல் ஆசாத் அதிபராக பதவியில்  இருக்கும்வரை அந்நாட்டில் அமைதியான  மற்றும் பாதுகாப்பன சூழல் ஏற்படாது என்று அமெரிக்கா வெள்ளைமாளிகையின் சீன் ஸ்பைசர்  செய்தித் தொடர்பாளர் குறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிககாவின் வெள்ளைமாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறும்போது சிரியாவின் அரசியல் எதிர்காலம் சிரிய மக்களால் சுதந்திரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் எண்ணுகிறது

ஆனால் சிரியர்கள் சுதந்திரமாக செயல்படுவது ஆசாத் ஆட்சியில் நினைத்து பார்க்க முடியாதது என்று எங்களுக்கு நன்கு தெரியும். சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் அதிகாரத்தில் இருக்கும்வரை சிரியாவில் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படாது".

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

மேலும் சிரியாவில் அமைதி ஏற்பட ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது. ஆனால் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் செயல்பட்டு வருவதால் அமைதி ஏற்பட வழி இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

சிரியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் என்றும் அதிரடியான செய்திகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா.