Flash News :
 
  அரசியல்  
  
    
 

கார்த்திக் சிதம்பரத்தின் ஊழல் அம்பலம்

 

மீடியா நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி வழங்குவதற்காக ரூ.90 லட்சம் லஞ்சமாக வாங்கிய கார்த்திக் சிதம்பரம்


Published by : Vivek Thiyagarajan                                             Updated : Tuesday, May 16,2017   9:24 AM


சென்னை :  மீடியா நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி வழங்குவதற்காக கார்த்திக் சிதம்பரம் ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கப்பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் சி.பி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.

வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் அனுமதியை பெற்று தர ப.சிதம்பரம் உதவியதாக கூறப்படுகிறது. ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்காக இதன் முதலீட்டை 4 கோடி என குறைத்துக் காட்டி வெளிநாடு வளர்ச்சி வாரியத்தில் அனுமதி வழங்க ரூ.90 லட்சம் கார்த்திக் சிதம்பரத்துக்கு என் எக்ஸ் மீடியா நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.

தொழிலதிபர் இந்திராணி முகர்ஜியின் நிறுவனமான என் எக்ஸ் மீடியா நிறுவனம் நியூஸ் எக்ஸ், 9x  மற்றும் 9x music ஆகிய சேனல்களை நடத்தி வருகிறது. இதன் முதலீட்டை குறைத்து காட்டுவதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உதவியதாகவும் இதனால் கார்த்திக் சிதம்பரத்திற்கு ரூ.90 லட்சம் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது அமலாக்கத்துறை.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய 7 பக்க கடிதத்தில்  வெளிநாடு முதலீடு வளர்ச்சி வாரியம் அனுமதி வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றதாக வருமான வரித்துறை அறிக்கையளித்ததை சுவாமி சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். 

அதுமட்டுமின்றி ஐரோப்பாவில் கேம்பிரிட்ஜ் நகரில் சொத்து வழங்கிய விவகாரத்தை சிதம்பரம் தனது வேட்புமனுவின் போது தெரிவித்தது கிடையாது என்று சாமி தன் கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் கார்த்தியின்  எஸ் சி பி எல் நிறுவனத்திற்கு என் எக்ஸ் டியாஜியோ ஸ்காட்லாந்து லிமிட்டட்கர்த்தா குரூப், ஏர்செல் மிட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பணம் கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

 

 

ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது என்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் மர்மமான பெரும் முதலீடு தொடர்பாக இந்த அதிரடி சோதனை சி.பி. நடத்தி வருகிறது.

சி.பி. நடத்திய சோதனையில் கார்த்திக் கம்பெனியில் பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன அதில் சிதம்பரம் அவரது மனைவி நளினி கார்த்திக் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் 2008ல் ஐரோப்பாவின் கேம்பிரிட்ஜ் நகரில் சொத்து வாங்கியது தெரிய வந்துள்ளது.