Flash News :
 
  அரசியல்  
  
    
 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை

 


Published by : Vivek Thiyagarajan                Updated : Tuesday, May 16,2017  8:35 AM  

சென்னை :  சென்னையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் வீடுகளில் சி.பி. அதிகாரிகள் இன்று அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். 

சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள இவர்களுடைய வீடுகள் உள்பட இவர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களிலும் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நாட்டில் மொத்தமாக  14  இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்றுவருகிறது. குறிப்பாக சென்னையில் 8 இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருகின்றன.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரின் நிறுவனமான ஐ.என்.எக்ஸ்ன் முதலீட்டை குறைத்து காட்டிய விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரத்தின் பெயரும் அடிப்பட்டதின் பெயரில் இந்த ரெய்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007-2008ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஆணையம் மூலம் ஒப்புதல் வழங்குவதற்காக நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சி.பி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.