Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

மும்பை அணியின் முக்கிய வீரர்கள் மோதல் வெற்றியை எட்டும் நேரத்தில் தேவையா இது...?

 


Published by : Kiruthiga                       Updated : Monday, May 15,2017  3:00 PM

மும்பை : ஐ. பி எல் பிளே ஆஃப் சுற்று நாளை துவங்க உள்ள நிலையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் இருவர் டிவிட்டரில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதிக்கொண்ட இரு வீரர்களும் சொந்த சகோதரர்கள் என்பதும் அணியின் முக்கிய வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீக் ஆட்டங்களில் ஒற்றுமையுடன் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பிலே  ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய பலமாக இருந்தவர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவர் உடன்பிறந்த சகோதரர் க்ருனால் பாண்ட்யா.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பெளலிங், பேட்டிங், ஃபீல்ட்டிங் என அனைத்து வகையிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதுகெலும்பாக இருந்த இந்த சகோதரர்கள் தற்போது தற்போது ஊடங்கங்களில் வெளிப்படையாக சண்டை போடுவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் சண்டையை தொடங்க ஹர்திக் பாண்ட்யா போட்ட டிவிட்டில், "வாழ்க்கையில் சில நேரங்களில் உங்களோடு நெருக்கமாக உள்ளவர்கள்தான் உங்களை அதிகம் ஏமாற்றிவிடுகிறார்கள். இது ஸ்கூல் இல்லை, ப்ரோ!" என கூறினார்.

 

 

இது யாருக்காக போடப்பட்ட டிவிட் என ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில் க்ருனால் பாண்ட்யா, ஹர்திக்கின் டிவிட்டுக்கு போய் பதில் கொடுத்ததன் மூலம் இது அண்ணன் - தம்பி சண்டை என தெரியவந்தது.

அண்ணன் தம்பி இருவரின் நேரடியான டிவிட் ஆல் இவர்களை கேலி செய்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் டிவிட் செய்துள்ளார்.

 

 

ஐ.பி.எல் சீசன் முக்கிய கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இரு சகோதரர்களும் வெளிப்படையாக ஊடங்கங்களில் மோதி கொள்வது மும்பை அணியின் உரிமையாளர் அம்பானியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


மேலும் ரசிகர்களின் கவனம் முழுக்க மும்பை இந்தியன்ஸ் மீது இருப்பதால் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதை விட எதிர் அணியுடன் மோதுங்கள் என ரசிகர்கள் அறிவுரை செய்ய  தொடங்கியுள்ளனர்.