Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

வலுவடையும் மும்பை அணி

 

9 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை


Published by : Gayathri                                                                   Updated : Sunday,  May 14,2017    9:20 AM                      

கொல்கத்தா : 
              ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில் நேற்று நடந்த கொல்கத்தா -  மும்பை எதிர்கொண்ட போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்றது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 174 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 63 ரன்களும், சவுராத் திவாரி 52 ரன்களும் எடுத்தனர். அதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரன் ரேட் தொடக்கத்தில் நன்றாக இருந்தபோதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் 20 ஓவர்களின் முடிவில் விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்றது கொல்கத்தா அணி.இதனால் புள்ளி பட்டியலில் தொடர்ந்து மும்பை முதலிடத்திலேயே இருந்து வருகிறது.