Flash News :
 
  சிறுகதை  
  
    
 

பிஞ்ச மனசு

 


எப்போதும் வாரி இரைக்கும் வெயில் அன்று சற்று குறைவாகவே இருந்தது
முத்து எப்போதும் போல் அனைவரின் கால்களையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தான் வழக்கம் போல் யார் செருப்பும் பிய்ய வில்லை...

முன்பு எல்லாம் ஒரு நாளில் இரண்டு மூன்று செருப்பாவது தைத்துவிடுவான் இப்போதெல்லாம் ஒரு செருப்பு தான் அதும் அதிசயமாய்

முத்து காலை 8 மாணிக்கே கிளம்பி விடுவான் வீட்டில் இருந்து அவன் மனைவி பவளம் வீட்டு வேலைக்கு தன் மகனை பள்ளியில் விட்டுவிட்டு சென்று விடுவாள்...

தன் மனைவியின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடப்பதை எண்ணி முத்து கவலை படுவது உண்டு ஆனால் என்ன செய்ய முடியும் செருப்பு தைப்பது குடும்ப தொழில் ஆச்சே அதான் விட மனசு வரமாட்டிக்கிது...

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பஸ் ஸ்டாண்டின் வெளிப்புறம் அவனுக்கென்று ஒரு ஓரமாக இடம் அமைத்துக்கொண்டான்.

ஒரு வயதான பெரிய குடை அதனுள் தான் அவன் அமர்வான் குடைக்கு கொஞ்சம் வயது ஆனதால் அங்கங்கே அடிவாங்கி இருக்கும்.

அவன் கடவுளாக நினைக்கும் ஊசி நூல் பழைய செருப்புகள் எல்லாம் ஒரு சாக்கின் மேல் வைத்து இருப்பான்.

யார் வேண்டுமானாலும் சொல்லி விடலாம் அது செருப்பு தைக்கும் இடம் என்று அந்த அளவிற்கு தூய்மையாகவே வைத்து இருப்பான்.

வழக்கம் போல் அனைவரின் கால்களையே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு ஒரு மகிழ்ச்சி...

ஆம், ஒருவரின் செருப்பு பிய்ந்து விட்டது.

செருப்பு பிய்ந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி முற்றி பார்த்தவர் முத்துவை பார்த்து விட்டார் அப்பாடா என்று நினைத்துக் கொண்டு செருப்பு தைத்து விட்டு சென்றார்.

 

 

நாடு எவ்வளவு வளர்ச்சி அடைத்தாலும் அதை பற்றி எல்லாம் இவனுக்கு தெரியாது கவலையும் கிடையாது இவனுக்கு தெரிந்தது எல்லாம் செருப்பு மட்டும் தான் செருப்பு தான் அவன் கடவுள்..

மதியம் ஆகிவிட்டது,

குடையின் ஓட்டை வழியே வெயில் எட்டிப்பாத்து சிரிக்கிறது.

முத்துவிற்கு பசி தாங்கவில்லை,

தன் மனைவி கட்டி தந்த சாப்பாட்டை சாப்பிட்ட பின் தான் கொஞ்சம் தெளிவாக இருந்தது
செருப்பு தைத்து தரும் அவன் ஒரு பிய்ந்த செருப்பை கூட போட்டது கிடையாது
அவனது நீண்ட நாள் ஆசையே ஒரு புது செருப்பு ஒன்றை போட வேண்டும் என்பதுதான்
இதற்காகத்தான் ஒரு உண்டியலில் பணம் சேர்த்து வைத்து கொண்டு இருக்கிறான்
குடும்ப சூழ்நிலையால் அவனுக்கு இது கனவாகவே இருக்கிறது இன்று வரை
அசதியின் காரணமாக வெயில் ஓய்வு எடுத்துக்கொள்ள சென்றது.
முத்து தன் குடும்ப சூழ்நிலையை நினைத்துக்கொண்டு இருந்தான்...

அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு பெண்ணின் செருப்பு பிய்ந்தது,

 

 

முத்துவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை,

அந்த பெண்ணையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தான் ஆனால் அவளோ செருப்பை ரோட்டிலேயே போட்டு விட்டு சென்று விட்டாள்...

அந்த பெண்ணையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தான் ஆனால் அவளோ செருப்பை ரோட்டிலேயே போட்டு விட்டு சென்று விட்டாள்...

அவளின் பிய்ந்த செருப்பை எடுத்து வந்து தன் கடையை அலங்கரித்து கொண்டான்
ஒரு செருப்பாவது கிடைத்த திருப்தியில் வீட்டிற்கு கிளம்பினான்.

பள்ளியில் இருந்து வந்த மகனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தான்
இவன் என்ன சிரமப்பட்டாலும் தன் மகனுக்கு குறை வைத்தது இல்லை.

இவன் ஆசைதான் நிறைவேறவில்லை ஆனால் தன் மகனிற்கு செருப்பு வாங்கி கொடுத்து இருக்கிறான் முத்துவிற்கு இதில் கொஞ்சம் பெருமைதான்.

முத்துவிற்கு
கால் வலி தாங்கவில்லை,

 

 

வெளியில் செருப்பு போட்டு நடக்காமல் இருப்பதால் பாதங்கள் எல்லாம் வெடித்து வெடித்து காணப்படும் எரிச்சல் தாங்க முடியாது... அவனுக்கும் அவன் மனைவிக்கும் தெரிந்து ஒரே கை வைத்தியம் மஞ்சளையும் தேங்காய் எண்ணெய்யையும் குழைத்து தடவுவது தான்
பவளம் முத்துவின் பாதங்களில் தேய்த்து விட்டாள்...

இருவரும் அன்று நடந்ததை பேசிக்கொண்டு இருந்தார்கள் இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை பார்த்து நிலவு வெட்கப்பட்டு மறைந்துக் கொண்டது
குடிசையின் ஓட்டை வழியே நிலவின் அழகை ரசித்து வந்தவன் அப்படியே தூங்கி விட்டான்...

எப்படியோ ஒரு வழியாக புது செருப்பு போட்டு கொண்டு கம்பிரமாக நடக்கிறார் முத்து
புதிதாக செருப்பு போடுவதால் அவருக்கு சரியாக நடக்க தெரியவில்லை புது செருப்பு வழுக்குகிறது செருப்பு போட்டு சொகுசாக ரோட்டில் நடக்கையில் அவரின் முகத்தை பார்க்க வேண்டுமே ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல் ஒரு சந்தோஷம்
காலில் போட்டு நடக்க மனம் வரவில்லை புதுசெருப்பாச்சே தேய்ந்து விட்டால் என்ன செய்ய முடியும்...

 

 

வீட்டிற்கு வந்து செருப்பை பத்திரமாக பைக்குள் வைத்து தன் பக்கத்திலையே வைத்திக்கொள்கிறார் தூங்கும் போது கூட அவர் அருகிலேயே வைத்து கொண்டு தான் தூங்குகிறார்...

முத்துவின் மகன் காலை அவசர அவசரமாக அப்பா சீக்கிரம் எந்திரிங்கப்பா என் செருப்பு பிய்ந்து விட்டது தைத்து கொடுங்க School க்கு நேரம் ஆச்ச்சு என்று அவசர படுத்தினான்
முத்து வேகமாக படுக்கையில் இருந்து எழுந்தார்...

எழுந்தவுடனையே தன் அருகில் இருந்த செருப்பை பார்த்தார் செருப்பு அங்கே இல்லை
முத்துவிற்கு எதுவும் புரிய வில்லை...

அவன் மகன் செருப்பு எடுத்து வந்து இந்தங்கப்பா தைத்து கொடுங்க என்றான்.
முத்துவும் தைத்து கொடுத்தார் தூக்கம் சற்று தெளிந்ததும் யோசித்து பார்த்தார்
அப்போது தான் அவருக்கு தெரிந்தது தான் கண்டது கனவு என்று....

வழக்கம் போல் குடைக்குள் உட்காந்து கொண்டு அனைவரின் கால்களையே பார்த்து கொண்டு இருந்தான் ஏக்கத்தோடு....