Flash News :
   
    
 

ஜி20 மாநாட்டில் இந்திய -சீனா அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை

 


Published by : Vivek Thiyagarajan                                                       Updated : Thursday, July 6,2017     3:40 PM


பீய்ஜிங்  :  இந்திய எல்லையில் உள்ள டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. இதனால்  தொடர்ந்து எல்லையில் அத்துமீறும் சீனாவை இந்திய ராணுவம் தடுத்து வருகிறது. இந்தியா சீனாவிடையே எல்லையில் தாக்குதல் நடந்து வரும் இந்த பதற்றமான சூழலில் இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்து பேச்சுவார்த்தைக்கு சாத்தியங்கள் இல்லை என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியா பூடான் சீனா போன்ற நாடுகள் ஒன்றாக இணையும் இடமான டோக்லாம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்காக சீன ராணுவம்  இந்தியா, பூடான் நாடுகளின் எல்லைக்குள் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. ஆனால் இந்திய இராணுவம் அதனை தடுத்து தங்கள் பலத்தை நிரூபித்து சீனாவின் முயற்சிகளை முறியடித்துள்ளது. இதனால் பெரும் கோபம் அடைந்துள்ள சீனா அதிரடியான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியா தன்னுடைய படையை திரும்பப் பெற வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவோ அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
 
இந்த சூழலில் ஜி20 நாடுகள் பங்குபெறும் மாநாடு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ள நிலையில் இருவரும் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவார்களா என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கென் ஷூவாங்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 

 
 செய்திகள்
கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

 
 

 
 
 
 
வீடியோ
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
 
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
 
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Emotional Speech - seeman is most loud speaker வ உ சி மக்கள் நல பேரவை