Flash News :
   
    
 

கனடாவின் 150 பிறந்தநாள் - உலக தலைவர்கள் வாழ்த்து

 


Published by : Vivek Thiyagarajan                                                     Updated : Monday, July 3,2017      5:02 PM 


கனடா : கனடா நாட்டின் 150-வது பிறந்தநாளுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய குடியரசு தலைவருக்கு நிகரான கனடா கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.அமெரிக்க நாடானது கனடாவுடனான நல்லுறவை பேணிக்காத்து போற்றி வருகிறது. 

மேலும் கனடா கவர்னருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் நம்முடைய இரண்டு நாடுகளைப் போல் தொடக்கம் முதல் இணக்கமான உறுதியான உறவை கட்டிக்காக்கும் நாடுகள் வேறு எதுவும் இல்லை. போர்க்காலங்களிலும் அமைதிக்காலங்களிலும் வளர்ச்சியிலும், சோதனைக்காலத்திலும் கனடாவும் அமெரிக்காவும் இணைந்து நின்று சாதித்துள்ளோம். 

உலகின் மிகவும் நீளமான எல்லையை கொண்டிருக்கும் நமது இரண்டு நாடுகளும், பரஸ்பர நல்லெண்ணத்தை பேணிக்காத்து வருகிறோம் என்று வாழ்த்து செய்தியில் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் கனடா, அனைவரையும் வரவேற்கும், உரிய மரியாதை அளிக்கும், கனிவுடன் கவனித்துக் கொள்ளும் நாடாகும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நூற்றாண்டு விழாவின் போது, சமத்துவம், சுதந்திரம், இணக்கத்துடன் அரவணைத்தல் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு வாழ்த்தினேன். 

கனடியர்கள் இந்த மூன்று முக்கிய அம்சங்களிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். வருங்காலங்களில் உலகத்திற்கு இந்த மூன்றையும் நினைவூட்டி முக்கிய பங்காற்றும் என நம்புகிறேன். மிகவும் இளமையான நாடாக இருந்த போதிலும் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க நாடாக கனடா சிறப்புற்றுள்ளது, என்று இங்கிலாந்து ராணி எலிசபெத் கனடியார்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
 செய்திகள்
கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற குறும்பட விழா

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருப்பு சட்டைக்கு தடை

 
 

 
 
 
 
வீடியோ
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
 
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Successful Lady Auto Driver, Owned his family more than 15 years... Must Watch
 
WOMEN OWNED A BARBER SHOP NOT A BEAUTY PARLOUR - Must Watch
 
Emotional Speech - seeman is most loud speaker வ உ சி மக்கள் நல பேரவை